முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் யானை சவாரி

May 11, 2019 03:33 PM 200

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் வளர்ப்பு யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் தற்போது கோடை சீசன் நடைபெற்று வருகிறது. கோடை சீசனுக்கு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் முதுமலையில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வருகிறது.

யானை மீது சவாரி செய்து வனப்பகுதியில் இயற்கை காட்சிகளையும், மான், மயில் போன்ற விலங்குகளையும் சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் வனப்பகுதியில் யானை மீது அமர்ந்து சவாரி செய்வது புது அனுபவமாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted