தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்திய வணிகர்கள்: பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

May 09, 2019 02:27 PM 233

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தடையை மீறி பயன்படுத்திய வணிகர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிகங்களில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி அப்பகுதியிலுள்ள மளிகைக் கடைகள், உள்ளிட்ட வணிக வாளகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து வணிகர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted