சாலை விபத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பலி

Jul 11, 2019 07:53 PM 57

பரங்கிமலை போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் நடராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜ், இவர் பரங்கிமலை போக்குவரத்து பிரிவியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கத்திபாரா மேம்பாலம் வழியாக நந்தம்பாக்கத்திற்கு நடராஜ் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று உதவி ஆய்வாளர் நடராஜனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நடராஜன் லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted