திருச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

Jan 24, 2020 07:13 AM 262

திருச்சியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருச்சி புதிய கலையரங்கம் திருமண மண்டபத்தில் திருவெறும்பூர், மனப்பாறை உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பை, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்து, அவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கினார். அதை தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் கட்சி பாகுபாடின்றி, மக்களின் தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted