யானைகளை கற்களால் அடித்து விரட்டி இளைஞர்கள் அத்துமீறல்

May 06, 2021 01:22 PM 673

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை வனப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த யானைகளை இளைஞர்கள் சிலர் விரட்டி அடிக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமூர்த்திமலையில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் தண்ணீரை தேடி 3 யானைகள் அங்கும் இங்குமாய் திரிந்துக் கொண்டிருந்தன.

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யானைகளை கற்களால் தாக்கை விரட்டி அடித்தனர்.

யானைகளை இளைஞர்கள் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது...

 

https://youtu.be/BnA-KjLLYyA 

 

இதனையடுத்து யானைகளை துன்புறுத்திய இளைஞர்கள் மீது வனத்துறை அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மலைவாழ் பகுதியை சேர்ந்த அந்த இளைஞர்களை அதிகாரிகள் வலை வீசி தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted