இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Apr 30, 2019 08:06 AM 256

புதுக்கோட்டையில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை கண்டித்தும், இந்த குண்டு வெடிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் தீவிரவாதம் வழிபாடு இடங்களில் நடைபெறுவதை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெற கூடாது என பிராத்தனை செய்தனர்.

சென்னை மயிலை முன்னாள் பேராயர் சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள், இந்து மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Comment

Successfully posted