திருச்சி, முக்கொம்பிற்கு நீர்வரத்து அதிகரிப்பு

Sep 11, 2019 01:24 PM 87

திருச்சி முக்கொம்பிற்கு நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியாக இருப்பதால் , கொள்ளிடம் மேலணையில் இருந்து 31 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் திறந்து விடப்பட்ட 71 ஆயிரம் கன அடி நீர் தற்போது
திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அதில் 39 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும், 31 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும், 1000 கன அடி நீர் கிளை வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகரித்துள்ளதால் 39 ஆயிரம் கன அடி காவிரியில் திறக்கப்பட்டுள்ளது என்றும், கூடுதலாக வரும் நீர் கொள்ளிடத்தில் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர் வரத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பாலத்தின் வழியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியை ஒட்டிய மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted