திருச்சி வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய தடயம் சிக்கியது : காவல்துறை

Feb 11, 2019 07:02 PM 150

திருச்சி வங்கி கொள்ளை வழக்கில், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்த மாதம் 28 ஆம் தேதி, சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்டது. 700 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை தொடர்பாக, சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில், வங்கி ஊழியர்கள் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களது செல்போன் எண்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், கொள்ளைப்போன நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted