திருச்சியில் வழக்கறிஞரை ஓட ஒட விரட்டிப் படுகொலை செய்த மர்மநபர்கள்

May 12, 2021 05:03 PM 276

திருச்சியில் பழிக்குப் பழியாக வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பீமநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன், கடந்த 9ஆம் தேதி இரவு, தனது மகனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும்போது, மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சியினைக் கொண்டு மர்ம நபர்களைத் தேடி வந்த தனிப்படையினர், எடத்தெருவைச் சேர்ந்த பிரிஜேஷ் பிரசாந்த் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

பிரிஜேஷ் பிரசாந்தின் அண்ணன் ஹேமந்த் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வழக்கறிஞர் கோபிகண்ணனுக்கு தொடர்பிருந்ததாகவும், அதற்குப் பழிக்குப் பழியாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்

Comment

Successfully posted