ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் "கைத்துப்பாக்கி" எடுத்துச் செல்ல அனுமதி

Nov 23, 2021 03:56 PM 711

ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் கைத்துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என்றும், தற்காப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

ஆடு திருடர்களை பிடிக்க சென்றபோது படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் இல்லத்திற்கு சென்ற டிஜிபி சைலேந்திர பாபு, பூமிநாதனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பூமிநாதனுக்கு காவல்துறை சார்பில் வீரவணக்கம் செலுத்துவதாக கூறினார். கொலைவெறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது தற்காப்பிற்காக ஆயுத பிரயோகம் செய்யலாம் என சட்டம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted