வடமாநிலங்களையும், தென்மாநிலங்களையும் பிரிக்க முயற்சி - தமிழிசை சவுந்திரராஜன்

Oct 16, 2018 12:53 PM 451

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து, தமிழர்களின் கலாச்சாரம் குறித்தும், தமிழர்களின் உணவு குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

சித்துவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜக சார்பில், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், வடமாநிலங்களையும் தென்மாநிலங்களையும் பிரிக்கும் வகையில் காங்கிரஸ் அமைச்சர் சித்து அவதூறான கருத்தை தெரிவித்துள்ளார் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவிலை என்றும் கூறினார்.

மேலும், சித்துவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்காத மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் போலி தமிழார்வலர்கள் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். 

Comment

Successfully posted