விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை கடத்த முயற்சி

Nov 27, 2018 09:02 AM 270

நாகையில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை, மர்ம கும்பல் ஒன்று கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி என்பவரின் மகன் கணேஷ் விஷால்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கணேஷை மர்மகும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது. சிறுவன் அதிக கூச்சலிடவே அவனை காரில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் கணேஷ் விஷால் வீடு திரும்பி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted