துனீஷியா நாட்டின் அதிபர் டெஜி கெயிட் எசெப்சி காலமானார்

Jul 26, 2019 07:56 AM 233

துனீஷியா நாட்டின் அதிபர் டெஜி கெயிட் எசெப்சி தனது 92-வது வயதில் உடலநலக்குறைவால் காலமானார்.

கடந்த 2010-2011 ஆம் ஆண்டுகளில் வடக்கு ஆப்பிரிக்காவின் துனீஷியா நாட்டில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட ஜயின் அல்-அபைதீன் பின் அலிக்கு எதிராக உச்சத்தை எட்டிய மக்கள் புரட்சி, ஆட்சி மாற்றத்தை கண்டது.

ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற டெஜி கெயிட் எசெப்சி, துனீஷியா நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். 23-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related items

Comment

Successfully posted