காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Feb 01, 2019 02:50 PM 235

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற சண்டையில், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் நடத்திய நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

Comment

Successfully posted