சென்னையில் போக்குவரத்து காவலர்களை தாக்கிய இருவர் கைது

Jul 12, 2019 06:47 PM 65

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோயில் சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் இருவரையும் விரட்டி சென்ற போது, அந்த நபர்கள், மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசினர். பின்னர் காவலர்களை தள்ளி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த காவலர் பிரபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபர்கள கைது செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted