168வது படத்தில் ரஜினிக்கு இரண்டு ஹீரோயின்கள்?

Oct 15, 2019 07:32 PM 821

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிக்கும் 168வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மற்ற நடிகர்-நடிகைகள், படக்குழுவினர் குறித்த அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகைகள் ஜோதிகா,கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உறுதியாகும் பட்சத்தில் ரஜினியுடன் “சந்திரமுகி” படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஜோதிகாவும், முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted