முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் பலி

Sep 21, 2019 04:01 PM 155

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனமும் மொபட்டும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கட்டன். இவர் இருசக்கர வாகனத்தில் கைகாட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சோளம்பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினர் மொபட்டில்முசிறிக்கு வந்துள்ளனர். கைகாட்டி என்ற இடத்தில் வந்த போது வெங்கட்டன் ஓட்டிவந்த பைக்கும் சின்னத்தம்பி ஓட்டிவந்த மொபட்டும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வெங்கட்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சின்னத்தம்பி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சின்னதம்பியின் மனைவி ராஜேஸ்வரி இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted