அதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்

Jun 14, 2019 03:36 PM 160

பல்லடம் அருகே அதிவேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மற்றும் வேனின் மீது மோதி, அருகிலுள்ள பேக்கரி கடையில் புகுந்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் உள்ள சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற அந்தக் கார் பள்ளி வாகனத்தை கடக்க முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனை தொடர்ந்து கடையின் முன்புறம் நிறுத்தப்பட்டு இருந்த வேனின் மீது மோதியதோடு, அங்குள்ள பேக்கரி கடைக்குள் நுழைந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்தனர்.

Comment

Successfully posted