கள்ளக்காதல் விவகாரம் காரணமாக இருவர் தற்கொலை முயற்சி

Jul 26, 2019 07:37 AM 267

திண்டிவனம் அருகே கள்ளக்காதல் விவகாரம் காரணமாக விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமம் அருகே விஷம் அருந்திய நிலையில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒலக்கூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இருவரையும் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் கடலூர் மாவட்டம், நெல்லிகுப்பத்தை சேர்ந்த தில்ஷாத் பானு மற்றும் விவேக் என்பதும், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக, அவர்கள் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 

Comment

Successfully posted