சந்திரகாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு

Oct 24, 2018 09:22 AM 412

மேற்கு வங்கத்தில் ரயில்களில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்ற போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 

சந்திரகாசி ரயில் நிலையத்தில், நாகர்கோவில் - ஷாலிமார் விரைவு ரயில் மற்றும் 2 புறநகர் மின்சார ரயில்கள் அடுத்தடுத்து வந்தன. இந்த ரயில்களில் ஏறுவதற்காக மக்கள், நடை மேம்பாலத்தில் இருந்து முண்டியடித்துக் கொண்டு ஓடினர்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பெண் பயணிகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்,2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comment

Successfully posted