ஆரணி அருகே குடும்பத் தகராறு காரணமாக இருவர் தற்கொலை

Dec 15, 2019 12:27 PM 644

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, குடும்பத் தகராறு காரணமாக, மாமனார் மற்றும் மருமகள் இருவரும், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அணியாலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், மனைவி கலைவாணி மற்றும் தந்தை வேலுவுடன், ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வேலுவிற்கும், கலைவாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வேலு விவசாய நிலத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த கலைவாணியும், அச்சத்தில் பூச்சி மருந்தை குடித்ததால், அவரும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில், மாமனார், மருமகள் இறந்தது குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comment

Successfully posted