அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் தாக்குதல்: அல்கொய்தா தளபதி பலி

Oct 09, 2019 08:23 AM 44

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தளபதி கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில், அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய துணைக் கண்ட பிரிவின் தலைவராக செயல்பட்ட ஆசிம் உமர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வான் வழி தாக்குதலில், ஆசிம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பலர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted