அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதாக தகவல்

Jan 14, 2020 09:14 PM 1049

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் இறுதியில், இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தொடர் நிகழ்ச்சிகளால், அமெரிக்க அதிபரால் பங்கேற்க இயலவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானம், விரைவில், செனட் சபையில் தாக்கலாகி, வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், அவரது இந்திய பயணம் குறித்த திட்டமிடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. டிரம்பின் இந்திய வருகைக்கான தேதி குறித்து, இருநாட்டு அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப், பிப்ரவரி இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted