அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Dec 04, 2018 06:36 PM 211

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக அரசுக்கு எதிரான போராட்டங்கள், தாக்குதல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருதரப்பிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தலிபான்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இந்த தாக்குதல்களை தடை செய்ய அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க சிறப்பு தூதர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த விவகாரத்திற்கு இம்ரான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததை, பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு செய்த துரோகம் என்று கடந்த வாரத்தில் விமர்சித்திருந்த டிரம்ப், தற்பொழுது இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Comment

Successfully posted