அமெரிக்கா: தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுவன்

Sep 04, 2019 01:37 PM 227

அமெரிக்காவில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் 14 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், எல்க்மொண்டில் என்ற இடத்தில் உள்ள வீட்டில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சம்பவத்திற்கு பின்னர், காவல்துறையினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறுவன், தனது குடும்பத்தினர் 5 பேரையும் சுட்டு விட்டேன் என்று கூறியதாக அலபாமா அரசு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. குடும்பத்தினரை சுட்டு கொன்ற சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவன் எதற்காக கொலை செய்தான் என்ற தகவல் தெரியவில்லை.

Comment

Successfully posted