உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பிரசாரத்தில் பணம் பட்டுவாடா

Oct 15, 2019 04:23 PM 197

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதியின் கூட்டத்தில் ஆள் சேர்ப்பதற்காக டோக்கன் வழங்கி பணம் பட்டுவாடா செய்த திமுகவினரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு காணை அடுத்த மாம்பழப்பட்டு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திமுக நிர்வாகிகள் பணம் வழங்குவதற்கான டோக்கன்களை விநியோகம் செய்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் இருந்து டோக்கன்களை பெற்றுக் கொண்டு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை திமுகவினர் வழங்கி உள்ளனர்.

Comment

Successfully posted