உதயநிதி ஸ்டாலின் கட்சியில் இருப்பதாகவே தெரியவில்லை - பாமக வேட்பாளர் சாம்பால்

Apr 11, 2019 03:40 PM 336

உதயநிதி ஸ்டாலின் கட்சியில் இருப்பதாகவே தெரியவில்லை என்றும், பிரசாரம் நடைபெறும் இடங்களில் காமெடி செய்து வருவதாகவும் மத்திய சென்னையின் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சாம் பால் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமகவை சேர்ந்த சாம் பால், சென்னை சூளைமேட்டில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், செல்லும் இடங்களிலெல்லாம் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருவதாகவும், அதிமுக கூட்டணி நிச்சயமாக அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும், பிரசாரம் நடைபெறும் இடங்களில் அவர் காமெடி செய்து வருவதாகவும் சாம் பால் தெரிவித்தார்.

Comment

Successfully posted