துண்டு சீட்டு உதயநிதி என்று பெயரெடுக்க ஆரம்பித்துவிட்டார் உதயநிதி

Sep 23, 2019 06:45 AM 1045

கோவை அருகே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். நிகழ்ச்சியில் தனது தந்தையை போன்று துண்டு சீட்டை வைத்து உதயநிதி பேசியதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.


திமுக தலைவர் ஸ்டாலின் மேடைகளில் பேசும்போது கையில் ஒரு துண்டு சீட்டை வைத்து பேசுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி துண்டு சீட்டை வைத்து பேசினாலும் கூட பல இடங்களில் உலர ஆரம்பித்து விடுவார்.

தந்தை எவ்வழியோ மகனும் தற்போது அவ்வழியே பின்பற்றி வருகிறார்.கோவை மாவட்டம் நெகமம் பேரூராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது தந்தையைபோலவே துண்டு சீட்டில் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்கும் முன்பே அவரே அளித்த பேட்டியில் கூட ஸ்டாலினை போலவே உதயநிதி ஸ்டாலினும் குறிப்புகளை வைத்தே பேசுகிறார். மேலும் கட்சின்யின் கொடியேற்ற நிகழ்ச்சி என்கிற பெயரில். பொள்ளாச்சி பல்லடம் தேசிய நெடுஞ்சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு செய்ததாக பொதுமக்களும் வாகனஓட்டிகளும் வேதனை தெரிவித்தனர். இப்படியே போனால் துண்டு சீட்டு ஸ்டாலின் என்ற பெயரெடுத்த தந்தையை போலவே துண்டு சீட்டு உதயநிதி என்று பெயரெடுக்க ஆரம்பித்துவிட்டார் உதயநிதி என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

Comment

Successfully posted