திமுகவில் உதயநிதியை அரியணை ஏற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Feb 09, 2020 07:15 AM 379

திமுக தலைவர் ஸ்டாலினையே மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்குள் உதயநிதியை அரியணை ஏற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஸ்டாலினை நம்பி இருந்த திமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது எனத் தெரிவித்தார்.

Comment

Successfully posted