பிரசாரக் கூட்டத்திற்கு 2 மணிநேரம் தாமதமாக வந்த உதயநிதி ஸ்டாலின்

Apr 12, 2019 06:49 PM 79

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து நத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் இரண்டு மணிநேரம் தாமதமாக கூட்டத்திற்கு வந்தார். அவர் வருவதற்கு முன்னதாக, விதிமுறைகளை மீறி வாகனத்தில் மக்களை ஏற்றி வந்த திமுகவினர் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Comment

Successfully posted