ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்

May 15, 2021 09:34 PM 617

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்திருந்த பொது மக்கள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காத்திருந்து வாங்கிய டோக்கன்களை காவல்துறை கண்டு கொள்ளாததே போராட்டத்திற்கு காரணம்.

டோன்கள் படி மருந்து வாங்க பொதுமக்கள் காத்திருந்த நிலையில் காவல்துறையினர் வரிசையில் முதலில் நின்று இருந்த 300 பேரை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, மற்றவர்களை நாளைக்கு வரும் படி அறிவுறுத்தினர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களுக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஆனால் ஏற்கெனவே 300 பேரை அனுமதித்து விட்டதால் மேலும் ஒருவரை கூட அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் கூறிவிட்டதால் மருந்து வாங்க காத்திருந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பான நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

நாளையாது ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா என்ற விரத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கின் வாயிலில் பொதுமக்கள் மீண்டும் காத்திருக்க தொடங்கியுள்ளனர்

Comment

Successfully posted