இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை - அரவிந்த் கெஜ்ரிவால்

Dec 22, 2018 09:53 AM 367

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிலிருக்கும் எந்தக் கணினியையும் உளவுத் துறை அமைப்புக்கள் வேவு பார்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக அரவிந்த் கெஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக தெரிவித்துள்ளார். ஆட்சி முடிய சில மாதங்கள் உள்ள நிலையில், மோடி அரசு அனைத்து எல்லைகளையும் மீறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பொது மக்களின் கணினிகளை வேவு பார்க்க அனுமதி என்பது, அப்பட்டமான தனிமனித உரிமை மீறலை இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comment

Successfully posted