மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று சென்னை வருகை!!

Jul 08, 2020 08:55 AM 476

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று சென்னை வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரை நண்பகல் 12 மணிக்கு சந்திக்கும் அவர், மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கிறார். மின்சாரத்துறையின் சீர்த்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய மின் விநியோக திட்டங்கள் குறித்தும், பல்வேறு மின் திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comment

Successfully posted