பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ

Sep 06, 2021 12:47 PM 1390

கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாறுதலுக்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரியின் சூழால் பகுதியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக வந்தவரிடம், கிராம நிர்வாக அலுவலர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்ற அந்த நபர், ஆயிரம் ரூபாயை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், 15 நாட்களுக்குள் பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்தார். அதனை அந்த நபர், வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted