நலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்

Sep 22, 2020 07:37 PM 878

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வி.ஜி.பி.யில் சிலை மனிதராக பணியாற்றி வந்த தாஸ் நலமுடன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு நிறுவனமான வி.ஜி.பி.யில் பணியாற்றி வரும் தாஸ் மிகவும் பிரபலமானவர். வாசலில் அசையாமல் சிலை போல் இருக்கும் இவர், கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் தாஸ் பற்றிய வதந்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், தாஸ் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் மற்றும் ஈஞ்சம்பாக்கம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted