குடியரசுத் தலைவர், பிரதமருக்கான பிரத்யேக விமானம் - 13 ஆயிரம் கி.மீ இடைநிறுத்தமின்றி டெல்லி வந்தது!

Oct 01, 2020 08:08 PM 688

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பிரத்யேக பயன்பட்டிற்காக வாங்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் விமானம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாடு பயணங்களுக்கு ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே, இந்தியா தலைவர்களுக்கு விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், விவிஐபி ஏர் இந்தியா ஒன் ரகத்தின் முதல் விமானம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு, 13 ஆயிரம் கிலோ மீட்டர் இடைநிறுத்தாமல் டெல்லி வந்தடைந்தது.

Comment

Successfully posted