இந்தியாவில் முதல் முறையாக கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி!

Jun 30, 2020 06:34 AM 2013

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பரிசோதனை நடத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பு மருந்தை பரிசோதிக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருத்தை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை ஜூலையில் மனிதர்களிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted