தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

Jun 01, 2021 04:44 PM 593

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாததால் ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அரசின் சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டில் இன்றே பல மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் சீதாராம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்று கிழமை தடுப்பூசி இல்லை என அறிவிக்கபட்ட நிலையில், நேற்று 500 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தடுப்பூசி மையத்தில் மருந்து இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பொதுமக்கள் விரக்தியடைந்தனர். முறையான திட்டமிடல் இல்லாததாலும், திடீரென வெளியிடப்படும் அறிப்பாலும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Comment

Successfully posted