வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் -எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை

Aug 16, 2018 10:44 AM 518
93 வயதான, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்பு அதிகரித்ததால், கடந்த ஜூலை, 11ஆம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்ற குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மருத்துவர்களிடம் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

Comment

Successfully posted

Super User

it's good leader of BJB