காதலர் தினத்திற்கு எதிர்ப்பு ... நாய்களுக்கு திருமணம் நடத்திய பாரத் சேனா அமைப்பினர்

Feb 13, 2020 12:25 PM 373

காதலர் தின கொண்டாட்டத்தை கண்டித்து கோவையில் பாரத் சேனா அமைப்பினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், பாரத் சேனா அமைப்பினர் நாய்களுக்கு மாலை அணிவித்து தாலி கட்டி திருமணம் நடத்தி வைத்தனர்.

மேலும் காதலர் தினத்துக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு நடைபெறுவதாக பாரத் சேனா அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

Comment

Successfully posted