இந்த லவ் மன்னாங்கட்டிலாம் தூக்கி குப்பை-ல போடுங்க :கவினை விளாசும் வனிதா

Aug 12, 2019 06:24 PM 618

இன்று பிக்பாஸ் வீட்டின் 51வது நாள்.சில நாட்களுக்கு முன்பு புது போட்டியாளராக கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்தார்.அவர் வந்தவுடன் வனிதா இடத்தில் கஸ்தூரி இருப்பதாக சக போட்டியாளர்கள் சொல்லி கொண்டிருந்தார்கள்.ஆனால் இன்று ஆட்டம் பாட்டத்துடன் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் எண்ட்ரி கொடுக்கிறார்.அவரை கண்டு சக போட்டியாளர்கள் திகைத்து போய் நின்றுவிட்டனர்.

இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் வனிதா ஆட்டம் பாட்டத்துடன் பிக்பாஸ் வீட்டினுள் எண்ட்ரி கொடுக்கிறார்.இரண்டாவது ப்ரோமோவில் வீட்டில் உள்ள அனைவரிடமும் சரமாரியாக கேள்வி கேட்கிறார்.முதலில் கஸ்தூரியிடம் ஏன் திடீர்னு தர்ஷனும், ஷெரினும் மாலை மாற்றுகிற அளவிற்கு செய்தீர்கள் என கேட்க, இல்ல அவுங்க ஏற்கனவே என எதையோ கூறி கஸ்தூரி மழுப்புகிறார்.இந்த லவ், மன்னாங்கட்டிலாம் தூக்கி குப்பைல போடுங்க,கவின் நான் உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன். ஆனால் பேசமாட்டேன்.worth இல்ல கவின் என வனிதா கூற, கவினோ அவர் கூறுவதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தலையை ஆட்டுகிறார்.

மூன்றாவது ப்ரோமோவில், டைட்டில தூக்கி இவர் கைல கொடுத்தா, அது பிச்சை போடுற மாதிரிதான் என கூறி, தர்ஷனிடம் பிச்சை போட்டா உனக்கு வேணுமா என கேட்க, தர்ஷனோ வேணாம் என கூறுகிறார்.இது sympathy-கான show இல்ல.அக்கா, அண்ணா அப்படிங்கிறது மரியாதை கொடுக்குறது, அதுக்காக விட்டு கொடுத்துட்டு போறத்துக்கு இது கிழக்கு சீமையிலே படமா? கொஞ்சம் selfish-அ தான் இருக்கணும்.மேலும் சேரனையும், லாஸ்லியாவையும் சுட்டி காட்டுவது போல் இது அப்பா,இது பொண்ணுனா வீட்டுக்கு கிளம்புங்க என கூறுகிறார்.நிச்சயம் இன்றைய பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் சரமாரியாக கேள்வி காத்திருக்கிறது.

Comment

Successfully posted