மதுரையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Jan 14, 2020 03:35 PM 503

மதுரையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாநகரில் உள்ள முக்கியமான 4 பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபரின் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், காலை முதலே வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பகுதிகளான எம்ஜிஆர் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றது. மேலும் நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளதால்,வாடிவாசலில் உள்ள  பார்வையாளர்களின் பகுதிகள் காத்திருக்கும் பகுதி, வீரர்கள் காத்திருப்பு பகுதி என அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர் .

Comment

Successfully posted