தாமரைப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி!

Sep 26, 2020 09:29 AM 334

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். 

ஆந்திர மாநிலத்தின் நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் அனில்குமார், அம்மாநில அரசு சார்பில் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிகாரிகள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் வைக்கப்பட்டுள்ள பண்ணை வீட்டில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துள்ளனர். திரையுலகைச்சேர்ந்த பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும், கோவையில் இசைக்கலைஞர்கள் சார்பில், இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல்களை பாடி இசைக்கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதே போல, மதுரை மாநகரிலும் எஸ்.பி.பி மறைவுக்கு இசைக்கலைஞர்கள் பாடல்கள் பாடி இசை அஞ்சலி செலுத்தினர். 

 

 

Comment

Successfully posted