வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்

Jan 13, 2020 09:03 PM 730

வசூல்ராஜா படத்தில் வரும் கமலஹாசனைப் போல காதில் ஹெட்போனை மாட்டி  தேர்வெழுத சென்ற இளைஞர் காவல்துறையினரிடம் வசமாக மாட்டினார்

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்பூரில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த இளைஞர் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பரிசோதனை செய்தனர். இதில் முதுகின் பின்புறத்தில் ஹெட்போனை மறைத்து தேர்வறைக்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இளைஞரை கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். இளைஞர் வசூல்ராஜா பட பாணியில் பிக் பாக்கெட் அடிக்க முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted