ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி

May 11, 2019 03:03 PM 164

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 55 புதிய இடங்களுக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில், தமிழகத்தில் உள்ள 3 பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடல் மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கச்சா எண்ணெய், எரிவாவு எடுக்க ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted