கத்திரி வெயில் ஆரம்பிச்சுடுச்சு, உஷாரா இருங்க மக்களே

May 04, 2021 01:55 PM 373

தமிழ்நாட்டில் கோடை வெயில் ஏற்கெனவே வாட்டி வதைத்து வரும் நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.

வரும் 29 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், திருச்சி, வேலூர், மதுரை போன்ற மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் மேலும் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

Comment

Successfully posted