வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

Nov 19, 2021 10:13 PM 687

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பேரணாம்பட்டு மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயாகவும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயாகவும் அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Comment

Successfully posted