கடும் வெள்ளப்பெருக்கு - "நீரில் அடித்து செல்லப்படும் வீடுகள்"

Nov 22, 2021 04:46 PM 884

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீர் பள்ளிகொண்டா பகுதியில் ஒன்றாக இணைந்து, விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள காமராஜபுரம் கிராமத்தில், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு சில வீடுகளின் பின்பகுதி மட்டும் சேதமடைந்து உள்ளது.

முன்னெச்சரிக்கை வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வெள்ளப்பெருக்கால், வீடுகளை இழந்தவர்கள் கவலையடைந்துள்ளனர்.

Comment

Successfully posted