ஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை!

Jul 03, 2020 06:24 PM 792

ஈரோட்டில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தற்காலிக புதிய சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகலான பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி சந்தை கடந்த 3 மாதங்களாக பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதான வளாகத்தில் மாநகராட்சி சார்பில் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. 700 காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளுடன் தொடங்கப்பட்டுள்ள புதிய தற்காலிக சந்தையில் பொதுமக்களையும், சில்லறை வியாபாரிகளையும் அனுமதிக்க கோரி மொத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted