ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

May 12, 2021 07:10 AM 2598

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மருத்துவ கல்லூரியில் உள்ள ரெம்டெசிவர் விற்பனை மையத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகளை அங்குள்ள ஊழியர்கள் மூலமாக குப்பைதொட்டியில் போட்டு விட்டு, அதனை வெளிச்சந்தையில் 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யும் அவலம் அரங்கேறி வருகிறது. மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவர் விற்பனை மையத்தில் நடைபெறும் முறைகேடுகளை செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மருந்துகளை பெறுவதற்கான டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அரசின் முறைகேடுகளை அம்பல படுத்தியுள்ளது.

Comment

Successfully posted